மூத்திரம் பெய்த அவன்
முதுகெலும்பை முறி! - இது
அவன் ஆண்குறி வழி இறங்கிய
ஆதிக்க வெறி!
ஏறி உனை மிதிப்பவன்
எவனென்று அறி!
"கொடு என் உரிமையை"
என கோராதே - பறி!
எதிலும் நீ கீழில்லை
என மனதில் பதி!
உணராமல் போனால்
உதை பந்தே உன் கதி!
எவனுமிங்கு அடிமையில்லை
எனும் கூற்றே சரி! - சிலர்
ஏதிங்கு சாதியென
பிதற்றுகையில் சிரி!
உன் சிரம் தாழும் நிலையொன்றே
சிலருக்குக் குறி! - உன்
குனிந்த தலை இரசிப்பவனின்
குரல்வளையை நெரி!
உன் பொறுமைக்கு இழுக்கென்றால்
போர்க்கோலம் தரி!
மண்டியிட்டு வாழ்வதைவிட
மகிழ்ச்சியுடன் மரி!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome