Thursday, November 06, 2025

சேறு


 

தரங்கெட்ட நாயி ஒன்னு
தமிழ்நாட்டுல சுத்துது! - அது
வெறியெடுத்துப் போயி இப்ப
பெரியாரத் திட்டுது!
வாட்சப்பு வதந்திகளை
வரி விடாம கக்குது! - அது
நாக்பூரு செருப்புகள
நன்றியோட நக்குது!
தமிழ் தேசிய கொள்கைகள
தவிட்டுக்காக விக்கிது!
தனக்குத் தானே ஆப்பு செஞ்சு
தானாப் போயி சிக்குது!
திரள் நிதிய திருடித் தின்னு
திமிரெடுத்து கத்துது!
புரளிகளை அள்ளி விட்டு
புதுக்கதைகளைக் கட்டுது!
முடிச்சவிக்கி வேல பார்த்தும்
முன்னேறாம முக்குது!
மூக்கு நோண்டி மூதேவி இப்ப
முச்சந்தியில் நிக்குது!
வாங்கித் திங்கும் நாயிக்கெல்லாம்
வடக்கு எது? தெற்கெது? - இப்ப
எலும்புத் துண்டுக்காசப்பட்டு
கரண்ட்டுல வாய் வைக்குது!
குளவிக்கூட்டத் தெரியாம
கொழுப்பெடுத்துத் தொட்டது - இப்ப
கருப்புச் சட்ட குளவியெல்லாம்
கதறக் கதறக் கொட்டுது!
வளத்தெடுத்த இயக்கத்தையே
வன்மத்தோடு முட்டுது!
இளிச்சவாயி கூட்டமொன்னு
இவனுக்கும் கை தட்டுது!
தப்புத்தானே இவனையெல்லாம்
இப்பவரை விட்டது?
"சேறு"ன்னு நெனச்சு விட்டா
செருப்புல வந்து ஒட்டுது!
இளைஞர்களே போதும் நீங்க
இவன நம்பி கெட்டது! - இவன்
வாயில் வரும் பொய்யெல்லாம்
வாட்சப்புல சுட்டது!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome