Sunday, November 02, 2025

இரண்டொரு நாள்களாக


 

மற்ற சிலரைப்போல
மெளனமாகக் கடந்து சென்றிருக்கலாம்
அல்லது
வேறு பக்கம் பார்வை திருப்பி
வேகமாக நடந்து சென்றிருக்கலாம்
ஓரிருவர் உதவுவதை
ஓரக்கண்ணால் பார்த்தபடி
ஒதுங்கிப் போயிருக்கலாம்
அல்லது இரக்கப் பார்வையுடன்
இறைவா காப்பாற்று என்றபடி
இடத்தையாவது
காலி செய்திருக்கலாம்
இழிவுகள் நிரம்பிய
இதயத்தின் பாரத்தை
இதற்கு மேலும் தாங்க இயலாமல்
இப்படித்தான் புலம்பித் தவிக்கிறேன்
இரண்டொரு நாள்களாக
அதிலும் குறிப்பாக
பாதி கிழிந்த பணத்தாள் ஒன்றை
பார்வையற்ற அந்த யாசகனிடம்
கருணையின்றி கையளித்த
நாளிலிருந்து....

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome