முற்றுப் புள்ளியிட்டு
முடிப்பதில்லை
எப்போதும் என்
கவிதைகளை நான்!
எரிச்சலேற்றும் ஏதோவொரு
வார்த்தையின் இறுதியிலோ
உங்களது ஆர்வத் துளிகள்
ஆவியாகிப்போகும்
அந்த ஒரு நொடியிலோ
நீங்கள் பொறுமையிழக்கும்
குறிப்பிட்ட ஒரு வாக்கியத்திலோ
உங்கள் எதிர்பார்ப்புகள்
ஏமாற்றமடையும்
எல்லைக்கோட்டின் அருகிலோ
தானாகவே முற்றுப் பெறுகிறது
அந்தக் கவிதை
அதற்குக் கீழும்
நீண்டு கிடப்பவையெல்லாம்
முகமூடி போட்டுக்கொண்டிருக்கும்
முற்றுப்புள்ளிகளே!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome