Saturday, November 08, 2025

விஷப்பூச்சி

 


மரணக் களமா நாடு ஆச்சு - அதுக்கு
மணிப்பூர் ஹரியானா மாநிலம் சாட்சி!
இது அரக்கக் கூட்டம் நடத்தும் ஆட்சி -தினம்
மதத்த காட்டி அந்த மக்கள ஏச்சி!
கோயில் பள்ளிவாசல் சர்ச்சு - நடுவே
கோடாரி வீசுது கோமியக் கட்சி!
காரித் துப்பு முகத்தில் எச்சி - இந்த
காவி கூட்டத்த இனி செய்யணும் வச்சு!
எங்கும் கலவரக் காட்சி - இந்தக்
காட்டுப் பய கூட்டம் மனுசங்களா சீச்சீ!
சுத்த மோசம் இவங்க சூழ்ச்சி - இந்த
நாய்களால நாடு நாசமா போச்சு!
முட்டுதுங்க தினம் மூச்சு - கொஞ்சம்
முழுசா கண்ணத் திறந்து பாருங்க முழிச்சு!
போதும் இனிமே வெட்டிப் பேச்சு - இந்தப்
பேய்கள உள்ள போடுங்க புடிச்சு!
விழுந்துடாத நண்பா யோசி - நம்ம
விழுங்கப் பாக்குதொரு விசமுள்ள பூச்சி!
எதுக்கு இனிமே ஆராய்ச்சி - அந்த
வெசப்பல்ல வெட்டி
வெளியே எறிவோம் வீசி!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome