பதினெட்டு இடங்களில்
பலத்த காயங்கள்!
படுகொலையாகியிருக்கன்றன
அவனுடன் சேர்ந்து நியாயங்கள்!
மனித நாகரீகங்களை
மறந்து வாழும் மிருகங்கள்!
காவல்துறை நண்பனென்றால்
காரி முகத்தில் உமிழுங்கள்!
வெளுத்தும் பயனில்லை சில
வெறி நாய்களின் சாயங்கள்!
திருந்தும் எண்ணமில்லையெனில்
தீக்குளித்து சாகுங்கள்!
இனியெதற்கு காவல் நிலையம்
இழுத்து அதை மூடுங்கள் - அவை
சீருடைப் பேய்கள் உலவும்
சித்திரவதைக் கூடங்கள்!
தரங்கெட்டு நிற்கிறது
தமிழகத்தின் காவல் துறை!
காவல் நிலையச் சுவர்களெங்கும்
குரலற்றவர்களின் குருதிக் கறை!
தற்கொலைக்குத் துணிந்து விட்டால்
தாராளமாய் அங்கு நுழை!
சுருக்கமாகச் சொல்வதென்றால்
அது நரகத்தின் நகரக் கிளை!
இது கட்டவிழ்த்த காட்டு நாய்கள்
திட்டமிட்டு செய்த கொலை!
மன்னிப்பு கேட்டுவிட்டால்
மாறிடுமா இந்த நிலை?
நடவடிக்கை இல்லையெனில்
நடக்கும் மீண்டும் இந்தப் பிழை!
நாளை ஒரு கேள்வி வரும்
மனிதம் கிலோ என்ன விலை?
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome