பட்ட துன்பம் பாரம் நீங்க
ஒட்டுமொத்த முடிவெடு! - உன்
சுட்டுவிரல் நுனியழுத்தி
சூரியனை எழவிடு!
குற்றம் என்ற நிலையெடு!
நித்தம் நித்தம் நிகழும் கொடுமை
நிறுத்தும் வழியை நினைத்திடு!
உரிமை மீட்கும் ஒளியின் கீற்று
உதிக்கும் திசையில் உலவிடு!
அவல ஆட்சி அகல வேண்டும்
அறிவை அதற்குச் செலவிடு!
வழிமறந்த வசந்தம் உன்தன்
வாசல் தேடி வரவிடு!
விழி கெடுத்த வீணர் கூட்டம்
விலகிச் செல்ல வழிவிடு!
கயவர் ஆண்ட களங்கம் நீங்க
கறைகள் அகற்றிக் கழுவிடு!
மயிரில்கூட மலர்ந்திடாமல்
தாமரைக்குத் தாழிடு!
உன்னில் என்னில் பொங்குகின்ற
உணர்வைச் செதுக்க உளியெடு!
இன்னல் தீர்த்து மண்ணைக் காக்க
பகைவர் கொன்று பலியெடு!
கவலை துன்பம் எதற்கு மீண்டும்?
களத்தில் இறங்கி களையெடு! - நம்
கதவில் வந்து காவி பூசும்
கயவர் நோக்கி கனைதொடு!
இறுதி வாய்ப்பை இறுகப் பற்றி
கடல் கடந்து கரை தொடு! - நமை
முடக்கி வைத்த மூடர் சிலரின்
முகத்தில் பூச கரியெடு!
சமத்துவமதன் மகத்துவத்தை
சரித்திரத்தில் எழுதிடு!
சகித்து வாழ்ந்த வாழ்வு போதும்
சதிவலைகளை அறுத்திடு!
- நிலவை பாா்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome