Monday, November 03, 2025

நிதிய ஒதுக்குடா

 


வரிய இங்க வாங்கித்தான
வண்டி ஓட்டுற?
நிதி உரிமையக் கேட்டா உன்
திமிர காட்டுற
வடக்குல உக்காந்துகிட்டு
வால ஆட்டுற
கல்விக்கான காச கேட்டா
கம்பி நீட்டுற
பானிப்பூரி வாங்கித் திங்க
இந்தி எதுக்குடா?
சாணி திங்கும் சங்கிப் பயலே
நிதிய ஒதுக்குடா!
மாணவர்கள் கல்வியெல்லாம்
மாநில உரிம
எதுக்கு இங்க மூனு மொழி
எடுபட்ட எரும?
வடக்குலதான் கல்வித் தரம்
வறண்டு கிடக்குது - அங்க
இந்தி படிச்ச கூட்டமெல்லாம்
என்ன கிழிச்சது?
தயவு செஞ்சு வடக்கனெல்லாம்
தமிழ படிக்கட்டும்
அப்பவாச்சும் அவுனுக்கெல்லாம்
அறிவு கெடைக்கட்டும்
மும்மொழின்னு எவனும் வந்தா
மூஞ்சிய ஒடைப்போம்
ஆங்கிலமும் தமிழும் போதும்
அகிலத்த ஜெயிப்போம்
தேவப்படும் மொழிகள நாங்க
தேடிப் படிப்போம்
இந்திய நீ திணிக்க வந்தா
இடுப்புல மிதிப்போம்
சங்கித்தனம் சேட்டையெல்லாம்
வடக்கில் வச்சுக்க! - உன்
இந்தி மொழி பெருமையெல்லாம்
நீயே மெச்சிக்க!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome