பட்டியல் ஒன்று
தயார் செய்கிறேன்
எனை முற்றாகப் புரிந்துகொள்ளாதவர்களின்
பெயர்களை எழுதி
பத்திற்குள் அடங்குமென
நினைத்த எனை ஏமாற்றி
பக்கம் பக்கமாய்
வளர்கிறது வரிசை!
பெயர்கள் சேரச் சேர
வரிசை மாறுகிறது!
எண்ணங்கள் பல
தோன்றித் தோன்றி
எண்ணிக்கை ஏறுகிறது!
சில பல கூட்டல் கழித்தல்கள்
அடித்தல் திருத்தல்களுக்குப்பின்
ஆழ்ந்த சிந்தனையொன்றில்
எனை ஆசுவாசப்படுத்திக்கொண்டதற்கப்பால்
ஒரு வழியாக நிறைவுற்றது
அந்தப் பட்டியல்!
என் பெயரை மட்டும் தாங்கியபடி!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome