Monday, January 21, 2013

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...



எழுத்து இணையதளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசை வென்ற எனது கவிதை....

விவசாய நிலமெல்லாம்
வீட்டுமன ஆகுதடா!
வெள்ளாம செஞ்ச கூட்டம்
வேற பக்கம் ஓடுதடா!

ஆன  கட்டிப் போரடிச்ச
அந்தக் காலம் போனதடா! - இப்ப
ஆறு மூட்ட வெளச்சலுக்கே
ஆண்டியாத்தான் போனமடா!

காவேரி கனவு எல்லாம்
கானல் நீராப் போனதடா!
கடைசிவரைக்கும் மின்சாரமும்
கண்ணாமூச்சி காட்டுதடா!

நம்பி நட்ட நடவெல்லாம்
நாசமாத்தான் போனதடா!
தண்ணி கெடந்த கெணத்துல - இப்ப
தவள செத்துக் கெடக்குதடா!

வயலோடு சேர்ந்து எங்க
வாழ்க்கையுந்தான் காயுதடா!
வறண்டு போன பயிரயெல்லாம் - நாங்க
வளர்த்த மாடு மேயுதடா!

குறுவைக்குன்னு வாங்குன கடன்
குட்டி போட்டு நிக்குதடா! - இப்ப
சம்பாப் பயிரும் சாம்பலாகி
சாகச் சொல்லி நெருக்குதடா!