Thursday, November 06, 2025

காதலர் தினம்


 

வண்டி வண்டியாய்
வாழ்த்துச் செய்திகள்!
- வழக்கமான ஒன்றுதான்
வரவேற்கலாம் தவறில்லை!
பரிசுப் பொருள்களின்
பரிமாற்றம்!
- பரவலாக நடப்பதுதான்
பரவாயில்லை நடக்கட்டும்!
கடற்கரை, பூங்கா, உணவகமெங்கும்
கரம் கோர்த்தபடி காதல் புறாக்கள்
- காதலர் தினம் தானே
கடந்து போகலாம் தவறில்லை!
காலை முதல் மாலை வரை
காது வலிக்க கைப்பேசி உரையாடல்கள்
- கவலைப்பட ஒன்றுமில்லை
கதைக்கட்டும் பாவம்!
கரங்களில் ஏந்திய ரோஜாவோடு
காதல் விண்ணப்பங்கள்
- இயல்புதான் இன்று
இருக்கட்டும் பரவாயில்லை!
எல்லாம் சரிதான்....
ஆனால் இந்தக் கவிதைகளை நினைத்துதான்
கதிகலங்கிப் போய்
விழி பிதுங்கி நிற்கிறது காதல்!
காதல் கவிதைகளை
இன்று மட்டும் விட்டுவிடுங்கள்!
இல்லையெனில்
காதலின் விருப்பப்படி அதைக்
கருணைக் கொலை செய்துவிடுங்கள்!

- நிலவை பார்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome