சிக்கந்தர் ஒரு புறம்
சிவமைந்தன் மறுபுறம்
சிறுமதி கொண்ட ஒரு கூட்டம்
சிணுங்குவது நடுப்புறம்!
தென்னையிலே தேள் கடிக்க
பனை மரத்திற்கு பத்தியமா?
தர்காவில் பலி கொடுத்தால்
முருகன் புகழ் மூழ்கிடுமா?
புலால் உணவு படைப்பதெல்லாம்
புதிதொன்றுமில்லை அங்கு!
ஆனாலும் அழுகிறதோர்
அரக்க இனம் அவலம் என்று !
மனிதம் கொல்லும்
மாக்கள் கூட்டம்
புனிதம் என்று புலம்பியழ!
கறை படிந்த கழுதையினம்
கலவரம் செய்ய கிளம்பியெழ!
அயோத்தியின் அவல நிலை
தெற்கு நோக்கித் திரும்பிவர!
அயோக்கிய பொறுக்கிகளை
அனுமதியோம் நெருங்கவிட!
வேட்டுவகுல மருமகன் வெறும்
வெள்ளைச் சோறு உண்பானா?
வேட்டைக்கென வேல் தரித்தவன்
வெண்பொங்கல் தின்பானா?
குறிஞ்சி நிலத் தலைவன் வெறும்
கூட்டு பொரியல் ஏற்பானா?
தமிழ் கடவுள் தன் உணவில்
தயிர் சாதம் சேர்ப்பானா?
பாவம் எது சாபம் எது?
பரிந்துரைப்பது பார்ப்பானா?
வேல்முருகன் பக்தன் அதை
வேடிக்கை பார்ப்பானா?
முருகாற்றுப்படை முழுவதும்
மூடர்க்குத் தெரியுமா? - அதில்
மறியறுத்துக் கறி சமைத்துப்
படைத்த வரி புரியுமா?
அறுபடையின் முதற்படையே
அரக்கரது பிடியிலா?
மடையர்கள் கை வைப்பது
மறத்தமிழன் மடியிலா?
இம்மூடத்தனம் நடப்பதெல்லாம்
மூத்த தமிழ் குடியிலா?
கண்மூடிக் கிடப்பது தான்
கழக ஆட்சி விடியலா?
குன்றத்திலே குடியிருக்கும்
குமரன் எங்கள் தெய்வம் - நாங்கள்
குழப்பம் செய்ய நினைப்பவரின்
குடுமிகளைக் கொய்வோம்!
இயன்றவரை பொறுத்துவிட்டோம்
இனியொரு விதி செய்வோம்!
பயம் எமக்கு பழக்கமில்லை
பாணங்கள் இனி எய்வோம்!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome