Sunday, December 30, 2018

வெல்லட்டும் புரட்சி

வெல்லட்டும் புரட்சி


ஜல்லிக்கட்டு போராட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது என் பேனா கொண்ட பெருங்கோபம் கவிதையாக வெளிப்பட்டபோது....

புயலாய் எழுந்தது புதுப்புரட்சி
வஞ்சகர்கெல்லாம் இனி வாய்க்கரிசி!

எரிமலை போன்றது நம் எழுச்சி
எதிரிகள் நமக்கினி புழு பூச்சி!

இது தீப்பந்தங்களின் திரட்சி!
இப்படை கண்டு பலருக்கும் மிரட்சி!

கிளை விட்டு பரவட்டும் கிளர்ச்சி
நம் கரங்கள் இணைந்ததில்
இணையற்ற மகிழ்ச்சி!

இது வன்முறை கலவா முயற்சி
எம் இளைஞனின் முயற்சியில்
எத்துனை முதிர்ச்சி!

இது அரக்கர்கள் நடத்தும் ஆட்சி
ஆயினும் இல்லை நமக்கினி வீழ்ச்சி!

பண்பாட்டை இழப்பது இகழ்ச்சி
சல்லிக்கட்டு எங்கள் சரித்திர சாட்சி!

மாடுகள் எங்களுக்கு மாட்சி
மஞ்சு விரட்டு எங்கள் மரபின் நீட்சி!

தடையின்றி கடைகளில் இறைச்சி
இது பிணம்தின்னி பீட்டாவின்
பெரிதொரு சூழ்ச்சி!

தடை கண்டு எமக்கில்லை தளர்ச்சி
பகலவன் மறைவதும் எழுவதும் சுழற்ச்சி!

இனி புரட்சிக்கு இங்கில்லை வறட்சி
எம் நியாயங்கள் தோற்கையில்
நீளும் இதன் தொடர்ச்சி!

No comments:

Post a Comment

Comments are always welcome