Sunday, December 30, 2018

தோழியே!

தோழியே!
சுகமாய் சுவாசிக்கிறேனடி 
நுரையீரல் நிறைத்து நிற்கும் 
நுட்பமான நாம் நட்பினால்! 

நெஞ்சு நிறைய நேசிக்கிறேனடி 
பஞ்சும் தீயுமாய் நாமிருந்தும் 
பற்ற விடாது நமைத் தடுத்த 
நாகரீக நட்பதனை! 

புனிதப் பொருட்களாய் பூசிக்கிறேனடி 
அவ்வப்போது நீயளித்த 
அழகான அன்பளிப்புகளை! 

கண்மூடி யோசிக்கிறேனடி 
நட்பென்னும் நதியிறங்கி 
நாம் நீராடிய நிமிடங்களை! 

வரலாற்று நூலாய் வாசிக்கிறேனடி 
நம் நட்பு நிகழ்வுகளைத் 
நயம்படத் தாங்கி நிற்கும் 
நானெழுதிய நாட்குறிப்புகளை!

No comments:

Post a Comment

Comments are always welcome