Monday, December 12, 2022

நன்றி


 "சார் சைட் ஸ்டாண்டு

எடுத்து விடுங்க"!
- இது சாலைப் பயணத்தில்
"சார் பாக்கெட்டிலிருந்து
பணம் விழப்போகுது பாருங்க"!
- இது மளிகைக் கடை வாசலில்
"தம்பி பாக்கி சில்லறை
வாங்காமப் போறீங்க"!
- இது மருந்துக் கடையில்
"அண்ணா நான் அடுத்த ஸ்டாப்புல
இறங்கிடுவேன் நீங்க உக்காருங்க"!
- இது பேருந்துப் பயணத்தில்
"சில்லறை இல்லையா?
பரவாயில்ல நாளைக்கு குடுங்க"!
- இது காய்கறிக் கடையில்
"சார் பார்த்து நடங்க
இங்க வழுக்குது"!
- முன்னே நடந்து செல்பவர்
"சார் பின் சக்கரத்தில்
காத்து கம்மியா இருக்கு பாருங்க"!
- இது போக்குவரத்து சந்திப்பில்
என இன்னும் எவ்வளவைத்தான்
பட்டியலிடுவது?
நல்ல அந்த இதயங்களுக்கு
நன்றி சொல்லாமல் கடந்தபின்
நானே எனைச் சபித்துக் கொண்ட
தருணங்களையும்
என் நன்றியை சற்றும் எதிர்பாராது
நகர்ந்து சென்ற அவர்களையும்!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome