Monday, December 12, 2022

கோகுலாஷ்டமி


 மகளிர் குளிக்கும் படித்துறையை

மறைந்திருந்து எட்டிப் பார்த்தவனை
மரத்தில் கட்டிவைத்து அடித்த
மானமுள்ள அந்தப் பெண்களை
பாராட்டத் தேடியபோது
பார்க்க இயலவில்லை ஒருவரையும்!
விசாரித்தபோது
குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு
குதூகலமாய் கொண்டாடிக் கொண்டிருந்தார்களாம்
குடும்பத்தோடு கோகுலாஷ்டமியை!
- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome