Monday, December 12, 2022

நம்ம பய

 

"இயற்கை உணவு"ம்பான்!
இஞ்சி சாறு இளநீரும்பான்!
பயல தேடிப்போனா
பானி பூரி கடையில் நிப்பான்!
குடிய ஒழிக்கணும்பான்!
குடிய கெடுத்துடும்பான்!
விடியக் காலையில
விஸ்கிலதான் கண்ணு முழிப்பான்!
சாதிகள் இல்லம்பான்!
"சமத்துவம் வெல்க"ம்பான்!
சபாஷ்னு கை குடுத்தா
சாரு என்ன ஆளுகம்பான்!
ஊழல வெறுக்குறேம்பான்!
உலகத்த திருத்தணும்பான்!
காசுக்கு ஓட்ட வித்து
கண்டவன தேர்ந்தெடுப்பான்!
அன்பே கடவுளும்பான்!
அடிதடி சரியில்லம்பான்!
சப்ப மேட்டருக்கே
சண்ட போட்டு சங்க கடிப்பான்!
எளிம பிடிக்கும்பான்!
எதுக்கு நடிக்கணும்பான்!
எழவு வீட்டுலயும்
ஏசி ரூம எதிர்பார்ப்பான்!
பெண்கள மதிக்கணும்பான்!
பெண்ணடிம எதிர்க்கணும்பான்!
கொண்டாடி பணம் நகைன்னு
பொண்டாட்டிய போட்டடிப்பான்!
தமிழ்மொழி உயிரும்பான்!
தாய்க்கு நிகரும்பான்!
தப்பில்லாம எழுதச்சொன்னா
அப்புறமா எழுதுறம்பான்!
நட்பு வட்டம் எல்லாத்திலும்
நாஞ்சொன்ன பய இருப்பான்!
நல்லவனா காட்டிக்கிட
நம்மளோட கழுத்தறுப்பான்!

- நிலவை பாா்த்திபன்

No comments:

Post a Comment

Comments are always welcome